நல்ல தமிழ் : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் 01-20

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்


தமிழில் பேசும்போதும்,எழுதும்போதும் பல தவறுகளைச் செய்கிறோம்.பேச்சுத் தமிழில் செய்யும் தவறுகளை  யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் எழுதும்போது நாம் செய்யும் தவறுகள், பளிச்சென்று தெரிகின்றன.அவற்றைக் களைந்து நல்ல தமிழில் எல்லோரும் எழுதவேண்டும் என்பதே இந்த வலைப்பூவின் நோக்கம்.

01
பிழை
சரி
சாலையின் இடதுபக்கம் செல்ல வேண்டும்.
சாலையின் இடப்பக்கம் செல்ல வேண்டும்.



02
பிழை
சரி
சரி
வீட்டுக்கு அருகாமையில் பள்ளி உள்ளது.
வீட்டுக்கு அருகில் பள்ளி உள்ளது.
வீட்டுக்கு அண்மையில் பள்ளி உள்ளது.



03
பிழை
சரி
தலைவரின் இறுதி ஊர்வலம் சென்றது.
தலைவரின் இறுதி ஊர்கோலம் சென்றது.



04
பிழை
சரி
தலைக்கு எண்ணை தேய்த்தான்.
தலைக்கு எண்ணெய் தேய்த்தான்.



05
பிழை
சரி
காக்கை நரியிடம் ஏமாந்து போனது.
காக்கை நரியிடம் ஏமாறிப் போனது.



06
பிழை
சரி
குளிப்பதற்கு சுடுதண்ணீர் போடு.
குளிப்பதற்கு வெந்நீர் போடு.



07
பிழை
சரி
எனது மகனுக்குத் திருமணம் செய்தேன்.
என் மகனுக்குத் திருமணம் செய்தேன்.



08
பிழை
சரி
பெரியார் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.
பெரியார் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.



09
பிழை
சரி
தவறுக்கு வருந்துகிறேன்.
தவற்றுக்கு வருந்துகிறேன்.



10
பிழை
சரி
பொறியாளர் கட்டிடம் கட்டினார்.
பொறியாளர் கட்டடம் கட்டினார்.



11
பிழை
சரி
தற்காலத்தில் உண்மைக்கு மதிப்பில்லை.
இக்காலத்தில் உண்மைக்கு மதிப்பில்லை.



12
பிழை
சரி
தேனீர் கொண்டு வா!
தேநீர் கொண்டு வா!



13
பிழை
சரி
உன்னைப் பார்த்து பலநாட்கள் ஆயின.
உன்னைப் பார்த்து நாள்கள் பல ஆயின.



14
பிழை
சரி
மலரை முகர்ந்து பார்த்தான்.
மலரை மோந்து பார்த்தான்.



15
பிழை
சரி
இந்திய அணி வென்று சுழல்கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது.
இந்திய அணி வென்று சுழல்கோப்பையைத் தங்க வைத்துக்கொண்டது.



16
பிழை
சரி
கண்ணன் முருகன் மற்றும் கந்தன் வந்தனர்.
கண்ணனும் முருகனும் கந்தனும் வந்தனர்.



17
பிழை
சரி
மாமியார் தரும் தொல்லையைச் சொல்லி முடியாது.
மாமியார் தரும் தொல்லையைச் சொல்வது முடியாது.



18
பிழை
சரி
பிரதி வெள்ளிக்கிழமை விடுமுறை.
வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை.



19
பிழை
சரி
இருபது பழங்களுக்கு மேல் இந்தக் கூடையில் உள்ளன.
பழங்கள் இருபதுக்கு மேல் இந்தக் கூடையில் உள்ளன.



20
பிழை
சரி
நான் பால் சாப்பிட்டேன்.
நான் பால் குடித்தேன்.