நல்ல தமிழ் : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் 81-100
பிழையின்றித் தமிழ் பேசுவோம்,                 எழுதுவோம்


தமிழில் பேசும்போதும்,எழுதும்போதும் பல தவறுகளைச் செய்கிறோம்.பேச்சுத் தமிழில் செய்யும் தவறுகளை  யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் எழுதும்போது நாம் செய்யும் தவறுகள், பளிச்சென்று தெரிகின்றன.அவற்றைக் களைந்து நல்ல தமிழில் எல்லோரும் எழுதவேண்டும் என்பதே இந்த வலைப்பூவின் நோக்கம்

81
பிழை
சரி
முன்புறம் மோதிய காரை புகைவண்டி இழுத்துச் சென்றது.
முன்புறம் மோதிய காரைப் புகைவண்டி தள்ளிக்கொண்டு சென்றது.82
பிழை
சரி
ராமச்ஜெயம் எழுதினான்.
ராமஜெயம் எழுதினான்.83
பிழை
சரி
மகப்பேறு இன்மைக்கு ஆலோசனை வழங்கப்படும்.
மகப்பேறு இன்மை நீக்குவதற்கு ஆலோசனை வழங்கப்படும்.84
பிழை
சரி
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வேட்பு மனு பதிவு செய்யப்பட்டது.85
பிழை
சரி
ராமப்பாணம் ஏழு மரங்களை துளைத்தது.
ராம பாணம் ஏழு மரங்களைத் துளைத்தது.86
பிழை
சரி
.திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் விடப்படும்.
திருவிழாவை முன்னிட்டு தனிப் பேருந்துகள் விடப்படும்.87
பிழை
சரி
அரசு திட்டத்தை ரத்து செய்தது.
அரசு திட்டத்தை விலக்கிக் கொண்டது.88
பிழை
சரி
பையிலிருந்துக் கொடுத்தான்.
.பையிலிருந்து கொடுத்தான்.89
பிழை
சரி
இவ்விடம் சிமெண்ட் விற்க்கப்படும்.
இவ்விடம் சிமெண்ட் விற்கப்படும்.90
பிழை
சரி
அரசு ஆணைப் பிறப்பித்தது.
அரசு ஆணை பிறப்பித்தது.91
பிழை
சரி
நில நடுக்கத்தில் பலர் இறந்தனர்.
நில நடுக்கத்தால் பலர் இறந்தனர்.92
பிழை
சரி
பிரயாணம் செய்யும்போது பிரயாணி பிரியாணி தின்றான்.
பயணம் செய்யும்போது பயணி பிரியாணி தின்றான்.93
பிழை
சரி
.படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்யக் கூடாது.
.படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தல் கூடாது.94
பிழை
சரி
மாமூல் நிலை திரும்பியது.
இயல்பான நிலை திரும்பியது.95
பிழை
சரி
சுடுச்சோறு தின்றான்.
சுடு சோறு தின்றான்.96
பிழை

சரி
பரிசோதகர் கேட்கும்போது டிக்கெட்டை காண்பிக்கவேண்டும்.
பரிசோதகர் கேட்கும்போது பயணச்சீட்டைக் காட்டவேண்டும்.97
பிழை
சரி
.திருடர்கள் ஜாக்கிரதை!
கள்வர் உளர்.கவனம் தேவை!98
பிழை
சரி
தலா ஒரு ரூபாய் கொடு.
தலைக்கு ஒரு ரூபாய் கொடு.99
பிழை
சரி
தேசப் பிதா காந்தியடிகள்.
தேசபிதா காந்தியடிகள்.100
பிழை
சரி
கபிலப்பரணர் வந்தனர்.
கபிலபரணர் வந்தனர்.